உ.பி.யில் அலட்சியத்தால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலி-விசாரணை அறிக்கையில் தகவல்

அலட்சியத்தால் லக்னோவில் உள்ள லெவானா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோ ஆணையர் மற்றும் காவல் துறை ஆணையர் சமர்ப்பித்த கூட்டறிக்கையில், 4 பேரின்…

அலட்சியத்தால் லக்னோவில் உள்ள லெவானா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ ஆணையர் மற்றும் காவல் துறை ஆணையர் சமர்ப்பித்த கூட்டறிக்கையில், 4 பேரின் உயிரைப் பறித்த லெவானா சூட்ஸ் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அலட்சியமே காரணம் என்று கண்டறியப்பட்டது.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஹோட்டல்களின் பட்டியலும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் விதிமுறைகளை மீறி செயல்படும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை, நகரின் வணிக மையமான ஹஸ்ரத்கஞ்சில் உள்ள லெவானா சூட்ஸ் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் இறந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

இந்த தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். விசாரணையின் போது, ​​எல்டிஏ கட்டிடம் பல விதிமுறைகளை மீறியதைக் கண்டறிந்து, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது.

இதையும் படியுங்கள்: தேனி சிறுமி உயிரிழந்த விவகாரம்: நீதி கிடைக்கவில்லை என பெற்றோர் வேதனை

முன்னதாக, தேனி மாவட்டம், ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட சுமார் 7 அடி பள்ளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 வயது சிறுமி ஹாசினி ராணி எதிர்பாராத விதமாக விழுந்து உயிரிழந்தார். இதுவும் அலட்சியம் காரணமாக நடந்ததாகவே புகார் எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.