எதிர்ப்பையும் மீறி மின் கட்டண உயர்வு அமல் ஏன்?

மின் கட்டண உயர்வு தொடர்பாக மின் நுகர்வோரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதும் உயர்த்தப்பட்டது ஏன் என்பதற்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், மின்கட்டண உயர்வு…

மின் கட்டண உயர்வு தொடர்பாக மின் நுகர்வோரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதும் உயர்த்தப்பட்டது ஏன் என்பதற்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், மின்கட்டண உயர்வு தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கேட்புக் கூட்டங்களில் மின் நுகர்வோர் எதிர்ப்பு தெரிவித்தும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

அளித்துள்ள விளக்கத்தில், மத்திய அரசின் மின் அமைச்சகத்தால் மாநிலத்திற்கு கூடுதல் கடன் வாங்குவதற்காக கட்டணத் திருத்தத்துடன் மின்துறை சீர்திருத்தங்களின் கட்டாய நிபந்தனையை உருவாக்கியுள்ளது

மத்திய நிதி நிறுவனங்களான REC / PFC நிறுவனங்கள் சிறப்புப் பணப்புழக்கத் திட்டத்தின் (ஆத்மநிர்பார்) கீழ் ரூபாய் 30,230 கோடி கடனைஅனுமதிக்கும்போது கட்டண திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற முன் நிபந்தனையின் அடிப்படையில் அனுமதித்துள்ளது

கட்டணத் திருத்தம் செய்யப்படாததால், ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் மீதமுள்ள ரூ.3,435 கோடியை REC/PFC நிறுவனங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

மின் அமைச்சகத்தின் வழி காட்டுதல்களின் படி புதுப்பிக்கப்பட்ட விநியோக துறை திட்டத்தின் (RDSS) கீழ் நிதியை வெளியிடுவதற்காக மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனையாகும். அவ்வாறு மின் கட்டணம் திருத்தம் செய்யப்படாவிட்டால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 10,793 கோடி ரூபாய்க்கான மானியங்கள் வழங்கப்படாது மற்றும் அந்த திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது.

மின் விநியோக நிறுவனங்கள் உட்பட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு கடன் வழங்குதற்கான வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு கட்டாய வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது. அதன் படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் மின் விநியோக நிறுவனங்கள் மின் கட்டண மனுவை தாக்கல் செய்யவேண்டும்.

CERC/APTEL போன்ற பல சட்ட அமைப்புகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் கட்டணம் திருத்தம் செய்யாதது குறித்து அவ்வப்போது கண்டனம் தெரிவித்து வந்தன.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உள்ளபடி வழங்கல் விலைக்கான மின்கட்டணம் இல்லாததால் தரவரிசையில் பின் தங்கியது. இந்த காரணத்தினால் வங்கிகள் மேலும் கடன் வழங்க முன்வரவில்லை.

மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் அறிவிக்கையின் படி 10 சதவீதம் வெளிநாட்டு நிலக்கரியை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் எரிபொருள் விலை மற்றும் மின்சாரத்தின் சராசரி அடக்க விலை அதிகரித்து, சராசரி மின் வழங்கல் விலை மற்றும் சராசரி மின் விற்பனை விலை ஆகியவற்றிற்கான இடைவெளி அதிகரித்துள்ளது.

2014-15 நிதியாண்டுடன் போக்குவரத்து மற்றும் கையாளும் கட்டணங்கள் 49% அதிகரித்துள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து மின்கொள்முதல் செய்யும் மின்சாரத்தின் மாறுபடும் விலை 2014-15 நிதியாண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 37% அதிகரித்துள்ளது.

பராமரிப்பிற்க்கான கடன்கள் மின்சாரத்தின் சராசரியாக பெறப்படும் விலைக்கும், மின்வழங்கலுக்கான விலைக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக வட்டிக்கான செலவுகள் 50% அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 8 வருட இடைவெளிக்குப் பிறகு மின் கட்டணத்தை சராசரியாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.