முக்கியச் செய்திகள் தமிழகம்

பாஜகவுடனான கூட்டணி முறியவில்லை: எடப்பாடி பழனிசாமி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால், பாஜகவுடனான கூட்டணி முறியவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் பெரும்பாலான இடங்களில் போட்டியிட விரும்புவார்கள் என்பதால்தான் பாஜகவுடன் உடன்பாடு ஏற்படவில்லை என தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே அதிமுக-பாஜக தனித்தனியே போட்டியிடுவதாக தெரிவித்த அவர், தேசிய அரசியலில் பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படும் என கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல, பாஜகவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத சூழலில் அதிமுக இருந்ததால் தனித்து போட்டி என்ற நிலைப்பாட்டை பாஜக எடுத்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதற்குமுன்பு, சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக வேகமாக வளர்ந்து வரும் கட்சி என்பதாலும், தொண்டர்களின் குரலை செவி சாய்க்கும் விதமாகவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது என அறிவித்தார்.

அண்மைச் செய்தி: மகளை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற தம்பதி?

மேலும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என அண்ணாமலை குறிப்பிட்டார். தேசிய அளவிலான கூட்டணியில் அதிமுக உடனான நல்லறவு தொடரும் எனக்கூறிய அவர், அதிமுக தலைவர்கள் மீது எந்த ஒரு வருத்தமும் கிடையாது என தெரிவித்தார். மேலும், இல்லந்தோறும் தாமரை சின்னத்தை கொண்டு சேர்ப்பதே பாஜகவின் இலக்கு எனக்குறிப்பிட்ட அவர், பாஜகவின் பொது எதிரி திமுக என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு அரசியலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஜென்டில்மேன் தலைவர்களாக உள்ளனர் என குறிப்பிட்டார். மேலும், மத்திய அரசின் திட்டங்கள், திமுக அரசின் 8 மாத கால மக்கள் விரோத போக்குகளை மக்களிடம் எடுத்துரைப்போம் எனக்கூறிய அவர், அதிமுகவிற்கான காலம் வரும்போது அவர்களுடன் கூட்டணியில் பாஜக இருக்கும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘கே ஜி எஃப்’ இயக்குனரின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

EZHILARASAN D

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாப்பிள்ளை உயிரிழப்பு

Web Editor

மொத்த ஆட்டத்தையும் மாத்திட்டார் ருதுராஜ்: பொல்லார்ட்

EZHILARASAN D