முக்கியச் செய்திகள் குற்றம்

மகளை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற தம்பதி?

சென்னையில், குடும்ப தகராறில், மகளை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, முதல் இரண்டு கணவர்கள் பிரிந்து சென்ற நிலையில், மூன்றாவதாக பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துள்ளார். பத்மநாபன் – விஜயலட்சுமி தம்பதி, 3 குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், மனைவி விஜயலட்சுமி நடத்தையில் பத்மநாபனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரவு வழக்கம் போல இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது, 13 வயது சிறுமி மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைக்குமாறும், விஜலட்சுமி தவறு செய்யவில்லையென்றால், மகள் மீது தீ பிடிக்காது என பத்மநாபன் கூறியதாக தெரிகிறது. இதனால், விரக்தியடைந்த, விஜயலட்சுமி, 13 வயது சிறுமி மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார்.

அண்மைச் செய்தி: நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ எப்போது தெரியுமா?

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 78 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், கவலைக்கிடமான நிலையில், சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, பெற்றோரான பத்மநாபன், விஜயலட்சுமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விஷால், சுனேனா நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு

Halley Karthik

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் இயக்குநர் டி.ராஜேந்தர்!

G SaravanaKumar

காதலியை கத்தியால் குத்திய இளைஞர் தூக்கிட்டு உயிரிழப்பு !

Saravana