தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 19,276 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,056 ஆக உள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33,45,220 பேராக அதிகரித்துள்ளது.
சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 2,897 ஆகக் குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 2,456 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 1,070 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில், 1,131 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 1,101 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
அண்மைச் செய்தி: பாஜகவுடனான கூட்டணி முறியவில்லை: எடப்பாடி பழனிசாமி
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,430 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 608 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 495 பேருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 567 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 765 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், 20 பேர் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








