’லவ் பண்ணுங்க’ – மாணவர்களுக்கு அறிவுறுத்திய சீனக்கல்லூரி…..!

சீனாவில் கல்லூரி ஒன்று வசந்தகால விடுமுறையின் போது “மலர்களை ரசியுங்கள், காதலில் விழுங்கள்” என்று தனது மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் நீண்ட காலம் முதல் இடத்தில் இருந்த நாடு சீனா. ஆனால் சமீபகாலமாக நிலவி வரும் மக்கள் தொகை சரிவு காரணமாக அந்த இடத்தை இந்தியாவிடம் சீனா இழந்துள்ளது. சீனாவில் சமீபத்திய ஆண்டுகளில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் தொடர்ச்சியாக 3-வது ஆண்டாக அந்நாடு மக்கள் தொகை சரிவைச் சந்தித்து.

சீனாவில் தற்போது மக்கள் தொகை சுமார் 141 கோடியாக உள்ளது. குழந்தை பிறப்பு விகிதம் சரிவு மற்றும் கடுமையான குழந்தை கட்டுப்பாடு கொள்கைகள் ஆகியவை இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் 2054-க்குள் மக்கள் தொகை வெகுவாகக் குறையக்கூடும் என ஐ.நா கணித்துள்ளது. இந்த மக்கள் தொகை சரிவு சீனாவின் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள விமானப் போக்குவரத்துத் தொழிற்கல்லூரி ஒன்று தனது மாணவரக்ளுக்கு வரும் ஏப்ரல் 1 முதல் 6 வரை வசந்தகால விடுமுறை அளிக்க உள்ளது. இந்த விடுமுறை நாட்களில் “மலர்களைக் கண்டு, காதலை அனுபவியுங்கள்” என்று மாணவர்களுக்கு அக்கல்லூரி அறிவுறுத்தியுள்ளது.

சீன விமான போக்குவரத்து தொழிற்கல்லூரியின் இந்த அறிவுறுத்தல் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. திருமணங்களையும் உள்நாட்டு நுகர்வையும் ஊக்குவிக்க இந்த அறிவிப்பு வெளியடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.