“தமிழகத்தில் நேர்மையான ஆட்சி தொடரக்கூடாது என்று ஊழல் சக்திகள் எல்லாம் ஒன்று கூடுகிறது” – மாணிக்கம் தாகூர்!

திமுக ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு எவ்வாறு நடைபெற்றது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் M.P மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “இந்த தீபாவளி பாதுகாப்புடன் சேதம் இல்லாமல் நடைபெற்று உள்ளது.
பட்டாசு பயன்படுத்தினால் மாசு குறைபாடு காணப்பட்டதாக வருத்தமளிக்கிறது. கொலை சம்பவங்களுக்கு தமிழகத்தில் சென்ற ஆண்டு என்ன நடந்ததோ அதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றி பார்க்க வேண்டும். எடப்பாடி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, எவ்வாறு செயல்பட்டு வந்தது என்பதையும் அடுத்த நடைபெற்ற திமுக ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு எவ்வாறு நடைபெற்றது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் 3 ஆட்சியை ஒப்பிட்டு டேட்டா வழங்க வேண்டும், அப்பொழுதுதான் கூற முடியும். அந்த வகையில் தற்பொழுது குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது.
இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கம் குறைக்க வேண்டும். மேகதாது குறித்து கர்நாடகா அரசு சிவக்குமாரை கண்டிக்கின்றேன்.

கர்நாடகா பிரச்சனையில் மோடி அரசு தமிழகத்திற்கு செய்யும் துரோகம். மத்திய அரசின் அதிகாரிகளை அனுப்பி மேகதாத பகுதியில் ஆய்வு செய்தது மன்னிக்க முடியாத குற்றம். மேகதாது அணைக்கு ஒவ்வொரு பாஜக அரசின் தலைவர்களும் தலைகுனிய வேண்டும். தமிழகத்தில் கூட்டணி குறித்து பாஜகவுக்கு பயமா இருக்கு.

நாங்கள் அனைவரும் ஒன்று சேர்த்து ஒரு இளைய இயக்கமாக தமிழக முதல்வர் விஜய்யுடன் இணைந்து செயல்படுகிறோம். மத்திய மாநில அரசு உறவு என்பது மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும் ஜிஎஸ்டி கவுன்சிலிங் கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்ட நீதிபதியின் பணி என்பது மிகவும் முக்கியமானது.
மீனவர்களின் உயிரை எந்த ஒரு பணத்தாலும் ஈடு செய்ய முடியாது. மீனவர்கள் உயிர் என்பது முக்கியமானது, அவருடைய இழப்பு அவர்கள் குடும்பத்தை பாதிக்கும். மத்திய அரசு செய்த தவறுக்கு கப்பல் படை, காவல்துறை, கடலோர காவல் படை பாதுகாப்பு கொடுக்க வேண்டியது.

சீமான் ஒருவராக அடி வாங்கிக் கொண்டு வருகிறார். இந்த அம்பாசமுத்திரம் தேர்தலில் டெபாசிட் வாங்கட்டும். இந்த தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர்ந்து வெற்றி பெறும்.
தொடர்ந்து இந்த அரசை வீழ்த்துவதற்கு குதிரை பேரம் செய்தும் பணப்பெட்டிகளை கொடுத்தும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்காகவும் பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்று எதிர்கட்சியில் செயல்பட்டு வருகின்றனர். அது எதுவும் பலிக்கவில்லை.

தமிழகத்தில் நேர்மையான ஆட்சி தொடரக்கூடாது என்று ஊழல் சக்திகள் எல்லாம் ஒன்று சேருகிறது. எல்லா இடங்களிலும் ஊழல் இல்லாத லஞ்சம் வாங்காத அரசு நடைபெற்று வருகிறது. இதை பாராட்ட வேண்டும். அரிசி, பருப்பு போன்றவற்றை மத்திய அரசே விலை கூடியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.