மதுரையில் பெட்ரோல் ஊற்றி இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஜீவா நகரில் நேற்று அதிகாலை மர்ம பொருள் தீப்பற்றி எரிவதாக அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தபோது, அது ஒரு ஆணின் சடலம் என தெரியவந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்த புகாரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், எம்.கே.புரத்தைச் சேர்ந்த அக்னிராஜ் என்பவர், அந்த பகுதியில் நள்ளிரவு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும், அவரை பெட்ரோல் ஊற்றி மர்மநபர்கள் எரித்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டின் அருகே அதிகாலை நடந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.