ஒலிம்பிக் போட்டி சினிமா

ஓடி வந்து கட்டி அணைத்து நன்றி தெரிவித்த ஐஸ்வர்யா ராய்

பொன்னியின் செல்வன் திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிரத்னமை நடிகை ஐஸ்வர்யா ராய் கட்டி அணைத்து நன்றி தெரிவித்தார்.

மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்திருக்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை லைகா புரொடெக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஜெயரம் ரவி, கார்த்தி, த்ரிஷா, நாசர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்துள்ள ஐஷ்வர்யா ராய் நிகழ்ச்சி அரங்கு உள்ளே வந்ததும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். உள்ளே நடிகர் கார்த்தி, த்ரிஷா உள்ளிட்டவர்களை ஒவ்வொருவரையும் பார்த்து கை கொடுத்து நன்றி தெரிவித்த ஐஷ்வர்யா இயக்குனர் மணி ரத்னமை பார்த்ததும் ஓடி வந்து கட்டி அணைத்து நன்றி தெரிவித்தார். பின்னர் சுஹாசினி மணிரத்னம் அவர்களையும் கட்டி அணைத்து நன்றி தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டி, நடிகர் ‘கஞ்சா கருப்பு’ அக்னிச் சட்டி ஏந்தி நேர்த்திக் கடன்!

Yuthi

விஜய் ரசிகர்களை வாரிசு திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? ரசிகர்கள் சொன்ன பதில்

Web Editor

தென்னிந்திய சினிமாவில் ரஜினிகாந்த் ரொம்ப பிடிக்கும் -நடிகை சன்னி லியோன்

EZHILARASAN D