20 ஒவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கையில் காயம் ஏற்பட்டதால் தென் ஆப்பிரிக்கா அணியில் இருந்து ரஸ்ஸி வான் டெர் விலகியுள்ளார்.
20 ஒவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 15 தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது. 16 நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் ஆகிய எட்டு நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளில், வெற்றி பெறும் முதல் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா வீரர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேஷவ் மகாராஜ், குயிண்டன் டி காக் இருவரும் விக்கெட் கீப்பர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் ஹென்ரிச் கிளாசன், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி ங்கிடி, ஆன்ரிச் நோர்ட்ஜே, வெய்ன் பார்னெல், டுவைன் பிரிடோரியஸ், ககிசோ ரபடா, ரீல்லி ரோசவ், தப்ரைஸ் ஷம்சி, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அணியில் மாற்று வீரராக ஆண்டிலே பெல்லுக்வாயா மற்றும் லிசாட் வில்லியம்ஸ் இடம் பெற்றிருந்தனர்.
இந்த அணியில் ரஸ்ஸி வான் டெர் டுசென் பெயர் இடம் பெறவில்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கையில் காயம் ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.







