முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

செந்தமிழ் பேச நிறைய கஷ்டப்பட்டேன் – நடிகை த்ரிஷா

செந்தமிழ் பேச நிறைய கஷ்டபட்டோம் என்று, பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை த்ரிஷா கூறினார்.

மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை லைகா புரொடெக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஜெயரம் ரவி, கார்த்தி, த்ரிஷா, நாசர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.

இது குறித்து த்ரிஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் இது போன்ற மிகப்பெரிய விழாக்களுக்கு கொரோனா தொற்றுக்கு பின் வந்ததில்லை. செந்தமிழ் பேச நிறைய கஷ்டபட்டோம். மணிரத்தினம் சார் படமென்றால் நிறைய உழைப்பு இருக்கும். ஒரு ராணியாக ஒரு கதாப்பாத்திரம் பண்ண வேண்டும் என்பது தான் எனது கனவு. அது தற்போது நடந்து இருக்கிறது.

மேலும், ஐஸ்வர்யா ராய் உள்ளேயும், வெளியேயும் மிகவும் அழகானவர். குந்தவை மற்றும் நந்தினி எனும் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தை நேருக்கு நேர் நின்று நடித்தது நன்றாக இருந்தது. நிறைய காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஈரோடு கிழக்கு தொகுதி – வேட்புமனு தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் தென்னரசு

Web Editor

வி.கே.சசிகலாவை சந்தித்தது எப்படி? – வைத்திலிங்கம் விளக்கம்

Dinesh A

வன்முறைச் சம்பவங்களுக்குப் பயன்படுகிறதா போலி சமூக வலைதளப் பக்கங்கள்?

Web Editor