திமுகவில் இணைந்த அதிமுக வெற்றி வேட்பாளர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்ற அதிமுக வெற்றி வேட்பாளர் ராஜேஷ்குமார் திமுகவில் இணைந்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்ற அதிமுக வெற்றி வேட்பாளர் ராஜேஷ்குமார் திமுகவில் இணைந்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழ்நாடு முழுவதும் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையின் 200 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுடன் களம் கண்ட திமுக 153 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது.

தொடர்ந்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக சென்னையில் 15 வார்டுகளில் வென்றுள்ளது. இது தொடர்ந்து ஆவடியில் திமுகவினர் 15 பேரும், அதிமுகவினர் 3 பேரும், காங்கிரஸ் மற்றும் சுயேட்சை தலா 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். மதிமுக மற்றும் விசிகவை சேர்ந்த வேட்பாளர்கள் தலா 1 வார்டுகளில் வெற்றி பெற்றனர். இது தொடர்ந்து ஆவடி மாநகராட்சி 14வது வார்டில் 1337 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் ராஜேஷ்குமார் வெற்றி பெற்றார்.

மேலும் இவர் வெற்றி பெற்ற கையோடு திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு பால்வளதுறை அமைச்சருமான சா.மு. நாசர் அவர்கள் நேரில் சந்தித்து அவர் முன்னிலையிலேயே திமுகவில் இணைந்தார் ராஜேஷ்குமார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.