நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கனிசமான வெற்றியை பெற்றுள்ள பாஜகவிற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலானது பலத்த எதிர்ப்பார்ப்புகளுடன் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் அமையும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை முதலே திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுவந்தனர். இது தொடர்ந்து இரண்டு கட்சிகளை தொடர்ந்து பாஜகவும் கனிசமான வாக்குகளை பெற்றுவந்தது.
பாஜக இந்த தேர்தலில் தனித்து களம் கண்டது. இதற்கான முடிவுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் நகராட்சிகளில் 1788 வார்டுகளில் போட்டியிட்ட பாஜக 56 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும் 230 பேரூராட்சியை சேர்ந்த வார்டுகளிலும் வென்று பாஜக தன்வசப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வெற்றிக்கு பாடுபட்ட பாஜக நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Congratulations @BJP4TamilNadu on your credit-worthy performance in #UrbanLocalBodyElections.
தலைவர் திரு @annamalai_k மற்றும் கட்சி சொந்தங்கள் அனைவரின் கடுமையான உழைப்பின் முதல் கட்ட பலன் இந்த தேர்தலின் முடிவில் காணக்கிடைக்கிறது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். @BJP4India— Nirmala Sitharaman (@nsitharaman) February 22, 2022
இது குறித்து அவரின் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது , “தலைவர் திரு அண்ணாமலை மற்றும் கட்சி சொந்தங்கள் அனைவரின் கடுமையான உழைப்பின் முதல் கட்ட பலன் இந்த தேர்தலின் முடிவில் காணக்கிடைக்கிறது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.








