தந்தை, மகன் மற்றும் மகள் வெற்றி

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றுளனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் அண்மையில் நடந்திருந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு…

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றுளனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் அண்மையில் நடந்திருந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு பிறகு மின்னணு வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டன. 10 மணியிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பெரும்பாலான இன்னும் சில இடங்களில் முடிவுகள் வந்த நிலையில் இன்னும் சில இடங்களில்  வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகப்படியான இடங்களை வென்றுள்ளன. வெற்றியை கொண்டாடும் விதமாக அக்கட்சியின் தொண்டர்கள் இனிப்பு கொடுத்தும் பட்டாசு வெடித்தும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில் நகர்புற உள்ளாடசி தேர்தலில்  சுவாரஸ்ய நிகழ்வாக , ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றிருப்பது தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தூத்துக்குடி ஏரல் பேரூராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 1வது வார்டு, 2வது வார்டு, மற்றும் 3வது வார்டில் அப்பா, மகன், மற்றும் மகள் மூவரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். இன்று வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் அவர்கள் 3 பேருமே வெற்றி பெற்றுள்ளார்கள்.

தேர்தலில் ஒரே குடம்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றிருப்பது தமிழ்நாடு முழுவதும் ரூசிகர தகவலாக வலம்வந்துகொண்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.