முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் நீக்கம்!

பெருந்துறை தொகுதியில் அதிமுகவிற்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் வேட்புமனுத் தாக்கல் செய்ததால், அவர் தற்போது அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஈரோட்டு மாவட்டம் பெருந்துறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம். இவருக்கு இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவருக்கு பதில் அத்தொகுதியின் ஒன்றிய கவுன்சிலர் ஜே.கே ஜெயக்குமார் என்பவர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட தோப்பு வெங்கடாசலம் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட தோப்பு வெங்கடாசலம் வேட்புமனுத் தாக்கல் செய்ததால், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி கட்சி தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

‘அதிமுகவிற்கு அவப் பெயர் உண்டாகும் விதத்தில், பெருந்துறை
சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட சுயேட்யையாக சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அந்தக் காரணத்தால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதியில் 2011, 2016ஆம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று கடந்த பத்தாண்டுகளாக அதிமுக எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதிய வலிமை பெறுகிறது இந்திய கடற்படை

G SaravanaKumar

வைகை கரையில் சங்க இலக்கிய பூங்கா – மதுரை எம்.பி

Halley Karthik

தோப்புக்கரணத்தில் உலக சாதனை

G SaravanaKumar