ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த்

இந்தியில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் படத்தில் ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த ஒப்பந்தமாகியுள்ளார். ஆயுஷ்மான் குரானா, நடிகை தபூ, ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளியான படம்…

இந்தியில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் படத்தில் ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆயுஷ்மான் குரானா, நடிகை தபூ, ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளியான படம் அந்தாதூன். இப்படம் தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார். தபு கதாபாத்திரத்திற்கு சிம்ரன் ஒப்பந்தமாகி இருந்தனர். இந்நிலையில் தற்போது ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நடிக்க ப்ரியா ஆனந்த் ஒப்பந்தமாகி உள்ளார்.


‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் இயக்குநர் ஜெ. ஜெ. ஃப்பெடரிக் இத்திரைப்படத்தை முதலில் இயக்குவதாக இருந்தது. ஆனால் தற்போது பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்குகிறார். அவரது ஸ்டார் மூவிஸ் நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது.


மேலும் இத்திரைப்படத்தில் மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார், ஊர்வசி, கே. எஸ். ரவிகுமார் ஆகியோர் நடிக்க, ரவியாதவ் ஒளிப்பதிவு செய்ய கலை இயக்குநராகச் செந்தில் ராகவன் பணிபுரிந்து வருகின்றனர்.
‘அந்தகன்’ படத்தில் நடிகர் பிரசாந்த், ப்ரியா ஆனந்த் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.