அதிமுக: தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்து கேட்கும் சசிகலா

சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து சசிகலா பேசியுள்ளார். தமிழகத்தில் அதிமுகவை மீட்கும் பொருட்டு வி.கே சசிகலா பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக…

சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து சசிகலா பேசியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுகவை மீட்கும் பொருட்டு வி.கே சசிகலா பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக நிர்வாகிகளை மற்றும் தொண்டர்களை சந்தித்து உரையாடி வருகிறார்.அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு சரி செய்யப்படும் எனவும் தனது தலைமையில் அதிமுக ஒன்றிணையும் எனவும் அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் இணைந்து அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் சசிகலா, தினகரன் இணைய வேண்டும் என வெளிப்படையாகவே கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த சூழலில் சசிகலா தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து கருத்துக்களை கேட்டறிகிறார். மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ள சசிகலா, அதற்கு முன்னோட்டமாக தொண்டர்களை சந்திப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.