சிஏஏ போராட்டம்: சஃபூரா சர்கா கைதுக்கு ஐநா கண்டனம்!

குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிராக டெல்லியில் போராடிய ஜாமிய மில்லியா பல்கலைழகத்தை சேர்ந்த மாணவி சஃபூரா சர்கா கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல்…

குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிராக டெல்லியில் போராடிய ஜாமிய மில்லியா பல்கலைழகத்தை சேர்ந்த மாணவி சஃபூரா சர்கா கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குடியுரிமைச் சட்டத்திருத்ததிற்கு எதிராக டெல்லி ஜாமியா மில்லிய பல்கலைகழகத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் மாணவி சஃபூரா சர்கார் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) குற்றம் சுமத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டபோது அவர் கருவூற்றிருந்தார். இதனால் அவரை விடுதலைச் செய்ய சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். சிறையில் இருந்தபோது சர்காவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பின்னர் பலகட்ட போராட்டத்திற்கு பிறகு அவர் விடுதலைச் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

மாணவி சர்கா கைது குறித்து ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் விவாதிக்கப்பட்டது. சர்காவின் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா,“ ’மாணவின் கைது நடவடிக்கை அடிப்படை உரிமை மீறல் . கருத்து சுதந்திரத்தை பறிப்பது தவறு” என்றும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி சஃபூரா சர்கா கூறுகையில் ‘ நான் ஒரு விதத்தில் பாக்கியம் செய்திருக்கிறேன். எனக்காக போராடிய மனித உரிமைகள் ஆய்வாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் என்னைபோன்று அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் கூடியவிரைவில் விடுதலை செய்யப்படவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.