திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொங்கல் சிறப்பு பரிசு தொகை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்…

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொங்கல் சிறப்பு பரிசு தொகை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

https://twitter.com/OfficeOfOPS/status/1471747629579071489

தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய அவர், அடிப்படை உறுப்பினர்களால்தான் அதிமுக தலைமைப் பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம்ஜிஆரின் கனவு தற்போது நிறைவேறியுள்ளதாக தெரிவித்தார்.

இதேபோன்று, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, பழைய பென்ஷன் திட்டத்தை நம்பிதான் அரசு ஊழியர்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். ஆனால், அதனை திமுக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என சாடினார். எம்ஜிஆர் ஜெயலலிதாவை தொடர்ந்து தற்போது முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்வழக்குகள் போட லஞ்ச ஒழிப்பு துறையை தி.மு.க அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.