அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் சீரமைப்பு பணி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை, அடையாறில் உள்ள தொல்காப்பியர் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். சென்னை அடையாறில் அமைந்துள்ள தொல்காப்பியர் பூங்காவில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு…

சென்னை, அடையாறில் உள்ள தொல்காப்பியர் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

சென்னை அடையாறில் அமைந்துள்ள தொல்காப்பியர் பூங்காவில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீரமைப்பு பணி முடிவடைந்ததும், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பூங்காவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோரும் பார்வையிட்டனர். சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் அடையாறு பகுதியில், 58 ஏக்கர் பரப்பளவில் தொல்காப்பியர் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.