குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கேப்டன் வருண் சிங்கின் உடலுக்கு மத்தியப்பிரசேத முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அஞ்சலி செலுத்தினார்.
கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் என மொத்தம் 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் மட்டும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 15ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட அனைவரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், வருண்சிங்கின் உடல் பெங்களூருவில் இருந்து யெலஹங்கா விமானப்படை நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, விமானம் மூலம் அவரது சொந்த ஊரான மத்தியபிரதேச தலைநகர் போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கேப்டன் வருண்சிங் உடலுக்கு அம்மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.







