கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்தில் எடுக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!

தமிழக சட்டப்பேரவையில் முக்கிய பொதுப் பிரச்சினைகள் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்தில் எடுக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேச அனுமதிக்கவில்லை என்று அதிமுக உறுப்பினர்கள் அவைக்கு வெளியே முழக்கமிட்டுள்ளனர். சீர்காழி மீனவர் கொலை குறித்து கவன ஈர்ப்பு கொடுத்து 5 நாட்களாக எடுக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.