தீவிர வாக்கு சேகரிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

கரூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். கரூர் தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரம், புதுத் தெரு, முல்லா தெரு உள்ளிட்ட பகுதிகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில்…

கரூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

கரூர் தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரம், புதுத் தெரு, முல்லா தெரு உள்ளிட்ட பகுதிகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அப்போது பேசிய அவர், அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியதால், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தன்னால் மக்களிடம் வாக்கு கேட்க முடிவதாகவும் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.