காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “அமெரிக்கத் தாக்குதல்களில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சில நாட்களிலேயே எந்த வருத்தமோ அல்லது மன்னிப்போ தெரிவிக்கப்படவில்லை. மாறாக, அமெரிக்கா தொடர்ந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.
அவர்களின் வார்த்தைகளைப் படியுங்கள்: “அமெரிக்க ராணுவத்தின் உத்தரவுகளை உடனடியாகப் பின்பற்றுங்கள்.” எந்தவொரு மீறலும் “அனுமதிக்கப்படாது.”
ஒரு சுதந்திர நாடு இத்தகைய பேச்சை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. ஆனால், சமரசம் செய்துகொண்ட நமது பிரதமரோ? மௌனமாக இருக்கிறார். ஒரு பணியாளரைப் போல அவர்கள் உத்தரவுகளைக் கேட்டு, அவற்றிற்கு அடிபணிகிறார்கள்.
சமரசம் செய்துகொண்ட பிரதமர் நாட்டின் கௌரவத்தைக் காக்க மாட்டார். ஏனெனில், நாட்டை அவமதிப்பவர்கள் அவரது கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.




