தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 59 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை இழந்து எதிர்கட்சியானது. தொடர்ந்து தோல்விக்கான காரணம் குறித்து அக்கட்சி ஆராய்ந்து வருகிறது.
இதற்கிடையில் தமிழ் நாடு சட்டமன்றம் ஜூன் 18 ஆம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜூன் 17 ஆம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் எப்படி செயல்பட வேண்டும், தங்களுடைய தொகுதிகளின் தேவைகளை எப்படி எடுத்துக் கூற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.




