நின்றுகொண்டிருந்த லாரி மீது ரயில் மோதி 50 பேர் பலி!

தைவான் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நின்றுகொண்டிருந்த லாரி மீது ரயில் மோதியதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். தைவானின் தலைநகரமான தாய்பெய் நகரிலிருந்து தாய்துங் நகரத்திற்குக் கல்லறை சுத்தம் செய்யும் தினத்தைக் கொண்டாட 500க்கும் மேற்பட்ட…

தைவான் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நின்றுகொண்டிருந்த லாரி மீது ரயில் மோதியதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

தைவானின் தலைநகரமான தாய்பெய் நகரிலிருந்து தாய்துங் நகரத்திற்குக் கல்லறை சுத்தம் செய்யும் தினத்தைக் கொண்டாட 500க்கும் மேற்பட்ட பயணிகள்,‘408’ என்ற பெயர்கொண்ட ரயிலில் பயணம் செய்தனர். இந்த ரயிலானது ஹுவாலியனின் வடக்கிலுள்ள குகையின் வழியே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டது. எதிர்பாராத இச்சம்பவத்தால் ரயிலானது அருகிலிருந்த கட்டுமானத் தளத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இக்கோர விபத்தில் 50 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.

‘408’என்ற பெயர்கொண்ட இந்த ரயிலானது மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியதாகும். இச்சம்பவம் நேற்று காலை 9 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இவ்விபத்தில் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்த பயணிகள் சிலர் சேதமடைந்த ரயிலின் பின்புறமாக வெளியேறித் தப்பிச் சென்றனர். மேலும் முதல் நான்கு பெட்டிகளிலிருந்த பலத்த காயமடைந்த 100 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும், சுரங்கத்தினுள் நான்கு நொறுங்கிய ரயில் பெட்டிகளிலிருந்து மீட்கப்பட்டனர். மேலும் உள்ளூர் ஊடகங்களின் தகவல்களின்படி ரயில் ஓட்டுநரும் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.