நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியினர் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வந்தனர்.
இந்த நிலையில் மாணவர்கள் போராட்டத்தின் விளைவாக இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்பேந்திர பிரதான் பதவி ராஜினாமா செய்தார். மாணவர்கள் போராட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “முதலில் இந்திய விவசாயிகள் முதலில் செய்துகாட்டினர். இன்று இளைஞர்கள் இதைச் செய்திருக்கிறார்கள். நாடு முழுவதும், நேரடியாகவும் இணையவழியாகவும் போராடி, இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதைப் போலவே, நீட் தேர்வும் ஒழிக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.




