அதிமுக அமைப்பு தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய, நகர, பேரூராட்சி, மற்றும் பகுதி நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு, அதிமுக உட்கட்சி தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் எனவும்,
முதற்கட்டமாக ராணிப்பேட்டை, கோவை, கரூர், ஈரோடு உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு 27ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், இம்மாவட்டங்களில் தேர்தலை நடத்துவதற்கான மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.
அண்மைச் செய்தி: மணப்பள்ளி அரிவாள் – அப்படி என்ன சிறப்பு?
மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், தேர்தல் ஆணையாளர்களை நேரில் வரவழைத்து 26ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டுமெனவும், தேர்தல் முடிந்த 3 நாட்களுக்குள், வெற்றிப்படிவம், விண்ணப்ப கட்டணம் உள்ளிட்டவற்றை கட்சி தலைமையிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








