மணப்பள்ளி அரிவாள் என்றாலே தனி பெயர் உண்டு. இதற்கு தரம் தான் முக்கிய காரணமே என்கின்றனர் அருவாள் தயாரிப்பவர்கள். அப்படி என்ன சிறப்பு? விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
திருப்பாச்சி அரிவாள் பற்றித்தான் அதிகம் பொதுமக்களுக்கு தெரியும். ஆனால், விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த செய்யப்படும் மணப்பள்ளி அரிவாள்களின் மகத்துவம் குறித்து யாருக்கும் தெரிவதில்லை.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் மணப்பள்ளி கிராமம் உள்ளது. அங்கு சாலைகளில் இருபுறமும் அருவாள்கள் செய்யும் 15 பட்டறைகள் 3 தலைமுறைகளாக அரிவாள் அடித்து கொடுத்து வருகின்றனர்.
இங்கு உருக்கு இரும்பை கொண்டு, பல விதமான அரிவாள்கள் செய்யப்படுகின்றன. எங்க அரிவாள் அடிச்சாலும் மணப்பள்ளி அருவாளைப் போல் வருவதில்லை என்று விவசாயிகள், மணப்பள்ளி வந்து அரிவாள் வாங்கி செல்வதாக கூறுகின்றனர். தரமான இரும்புகளை பயன்படுத்தி அரிவாள்களை செய்து கொடுப்பதனால் தான், மணப்பள்ளி அருவாள் என பெயர் வருகிறது என்று பெருமிதத்துடன் கூறுகிறார் அரிவாள் தயாரிப்பவர்.
விவசாயமும், விவசாயிகளும் இருக்கும் வரை மணப்பள்ளியில் அரிவாள் தயாரிக்கும் கொல்லுப்பட்டறை தொழில் நடந்து கொண்டே இருக்கும் என்கின்றனர் அருவாள் தயாரிப்பவர்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








