களைகள் அகற்றப்பட்டால்தான், மதிமுக செழிப்பாக வளரும் என்று மதிமுக தலைமைக் கழக பொதுச்செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் மதிமுகவின் 28வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியில் தலைமைக் கழக பொதுச்செயலாளராக துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய துரை வைகோ, மதிமுகவில் உள்ள களைகள் அகற்றப்பட்டால்தான், மதிமுக செழிப்பாக வளரும் என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இதற்கு முன் இருந்த மதிமுக வேறு, இனி இது மதிமுக 2.0 என்று தெரிவித்துள்ளார்.
மதிமுகவில் இன்னும் ஒன்றிரண்டு களைகள் உள்ளது அவர்களையும் அகற்றப்பட வேண்டும் என்று பேசிய அவர், தொண்டர்கள், நிர்வாகிகள் நிற்பந்தத்தின் பேரில்தான், நான் அரசியலுக்கு வந்தேன். நான் கட்சியில் 28 ஆண்டுகளாக உழைத்துள்ளேன், உழைக்கவில்லை என சொல்லாதீர்கள் என்று பேசினார்.







