INDvsZIM: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொரை ஒயிட்வாஷ் செய்த இந்தியா!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது.

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷ்ரேயஸ் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி அதே ஹராரேயில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிரங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் வைபவ் சூரிய வன்ஷி அட்டத்தை அதிரடியாக் துவங்கினார். மறுமுனையில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து வந்த இஷன் கிஷன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்து 26 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து அதிரடியாக் ஆடிய இலம் வீரர் வைபவ் சூரியவன்ஷி 4 சிக்ஸர்கள் மற்றும் 8 ஃபோர்களுடன் 49 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது.

இந்த நிலையில் ஜிம்பாப்வே அணி 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுகடனான தொடர் தோல்விக்குப் பிறகு ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்றி ஆறுதல் கிடைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மீண்டும் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.