உலகம்

செளதி அரேபியா பல்கலைக்கழகங்களில் விரைவில் யோகா!

சௌதி அரேபியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில், யோகா கலை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, சௌதி யோகா ஆணையத்தின் தலைவர் நௌஃப் அல்-மர்வாய் கூறுகையில், சௌதி அரேபியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் யோகா கலையை அறிமுகப்படுத்தும் வகையிலான ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்க: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பில்கேட்ஸ்!

ஜெட்டாவில் நடைபெற்ற பல்கலைக்கழக அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நௌஃப் அல்-மர்வாய், சௌதி அரேபியாவில் உள்ள ஏராளமான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி யைமங்களில் யோகாவை அறிமுகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், யோகா பயிற்சி மேற்கொண்டால் உடல்நலம் மிகுந்த பயன்களை அடைகிறது. உடல் மற்றும் மனநலத்துக்கு உகந்ததாக யோகா உள்ளது என கூறியுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

5 ஆண்டு ஆட்சியில் குற்ற நடவடிக்கைகள் குறைப்பு – அமித் ஷா

G SaravanaKumar

சர்வதேச விமானங்கள் ரத்து!

EZHILARASAN D

ஓராண்டு தலிபான் ஆட்சி-ஆப்கனின் நிலை என்ன?

Web Editor