“முந்தைய தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை” மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.…

கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், மாணவ பருவத்தில், இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி, படிப்படியாக பல்வேறு பதவிகளை பெற்று தற்போது முதலமைச்சர் வேட்பாளராக மக்களை சந்திக்க வந்துள்ளதாக கூறினார்.

மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து தரப்பினருக்கும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், கடந்த தேர்தல் அறிக்கையில் அதிமுக கூறியதுபோல, செல்போன் தந்தார்களா? கேபிள் டிவி கட்டணத்தை 70 ரூபாயாக குறைத்தார்களா? என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களையும், தொகுதிகளையும் இறுதி செய்து அறிவித்து பரப்புரையை தொடங்கியுள்ளன. அதே போல அதிமுக தரப்பினரும் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர். ஓரே கட்டமாக நடைபெறும் இத்தேர்தலின் முடிவுகள் மே 2ல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.