ஏ.ஜி.எஸ் வீட்டுத் திருமணம் : ஒன்றாக கலந்து கொண்ட விஜய் – திரிஷா….!

சினிமா தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் மற்றும் திரிஷா ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.

பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமானத்தின் உரிமையாளர் ஏ.ஜி.எஸ் கல்பாத்தி சுரேஷின் மகன் அபிஷேக் கல்பாத்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை ராமசந்திரா கன்வென்சன் செண்டரில் நடைபெறுகிறது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு திரையுலகினர் பங்குபெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தவெக என்னும் அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இக்கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது.

இதற்கிடையில் விஜயின் மனைவி சங்கீதா அண்மையில் விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏபரல் 20 ஆம் தேதி விசாரணைக்கு வரும் இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.