நத்திங் (Nothing) நிறுவனமானது, நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரியசின் விலை மற்றும் முக்கிய அம்சங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
இந்தியாவில் நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) ஸ்மார்ட்போன் கீழ்கண்ட விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.31,999
- 8GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.34,999
- 12GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.37,999
நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனானது 30Hz முதல் 120Hz வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட்டுக்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி 6.78-இன்ச் LTPS AMOLED டிஸ்பிளேவும் அளிக்கப்பட்டுள்ளது.
நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) ஸ்மார்ட்போன் கீழ்கண்ட விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் – ரூ.39,999
- 8GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் – ரூ.42,999
- 12GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் – ரூ.45,999
நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனானது 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டுக்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளேவை பொருத்தவரை 6.83-இன்ச் 1.5K பிளெக்சிபில் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் முறையே மார்ச் 13 மற்றும் மார்ச் 27 ஆகிய தேதிகளில் விற்பனைக்கு வருகிறது.







