IND vs ENG : அரைசதம் விளாசிய சஞ்சு சாம்சன்…..!

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி யில் இந்தியா அணி வீரர் சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகிறன்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை  தேர்வு செய்துள்ளார். இதனை தொடரந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா அணியில் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்பசன் ஆகியோர் களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 9 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து நிலையில் அவுட் ஆனார்.

ஆனால் மற்றொரு ஆட்டகாரரான சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசியுள்ளார். 26 பந்துகளில் 52 ரன்கள் விளசிய சஞ்சு சாம்சன் 3 சிக்ஸ் மற்றும் 7 போர்களை அடித்துள்ளார்.

தற்போது களத்தில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.