“பட்ஜெட்டை மட்டும் படித்தால் போதும்” – அமைச்சர் வினோத்துக்கு சபாநாயகர் அறிவுறுத்தல்!

முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர் வினோத் புகழுரை ஆற்றியபோது எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டதால் ட்ஜெட்டை மட்டும் படித்தால் போதும் என சபாநாயகர் அறிவுத்தினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாந்துறை அமைச்சர் வினோத் 2026-27-ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் பட்ஜெட் உரையை தொடங்கிய போது, “உயர்ந்த எண்ணங்களை விதையாக விதைத்து, ஊழல் என்ற களைகளை அகற்றி, சமத்துவம் என்ற செடியை வளர்த்து, மக்களாட்சி என்ற பெருமரத்தைத் தாங்கி நிற்கும் கோட்-சூட் அணிந்த விவசாயி. ஊரெங்கும் நாற்றமெடுத்த ஊழலை ஒழிக்க, உங்களை விட்டால் வேறு யாருமில்லை. ஒற்றுமையுடன், சாதி, சமயம் மறந்து, நாங்கள் கொண்டாட உங்களைப் போன்ற வரம் இல்லை. இனி எப்போதும் தலைப்புச் செய்தி ஒன்றாக, நீங்கள் பேசுவதாக இருக்கும். இல்லையெனில், உங்களைப் பற்றிப் பேசுவதாக இருக்கும்” என்று முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசினார்.

அப்போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வேளாண் அமைச்சர் வினோத்திடம் “வேளாண் பட்ஜெட்டை மட்டும் படித்தால் போதும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.