GOLD RATE | தங்கம் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 குர்றைந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,480-க்கும், சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,07,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை உயர்ந்த நிலையில் வெள்ளி விலையும் உயர்ந்து காணப்பட்டது. அதன்படி சென்னையில் வெள்ளி 1 கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.240-க்கும், 1 கிலோ ரூ.5000 உயர்ந்து ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.13,750-க்கும், சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.110,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி சென்னையில் வெள்ளி 1 கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.250-க்கும், 1 கிலோ ரூ.10,000 உயர்ந்து ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.