பயிர்கள் நனையாமல் இருக்க ‘தார்ப்பாய்’ திட்டம் – அமைச்சர் வினோத் அறிவிப்பு!

விளைபொருள் வீணாவதைத் தடுக்க தார்ப்பாய்கள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சாட்டப்பேரவையில் இன்று 2026-27-ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.  இதில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் விளைபொருள் வீணாவதைத் தடுக்க தார்ப்பாய்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மழை போன்ற இயற்கை நிகழ்வுகளிலிருந்து விளைபொருட்கள் வீணாகாமல் பாதுகாக்கவும், விளைவித்த தானியங்களை உலர்த்துவதற்கும் பெரும்பான்மையான விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, 2026-27 ஆம் ஆண்டில் 10 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் 43 ஆயிரத்து 500 விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.