ஆப்கானிஸ்தானில் இசை நிகழ்ச்சிகளுக்கும் இசைக்கும் தலிபான்கள் தடை விதிப்பார் கள் என்பதால், அந்நாட்டின் இசைக் கலைஞர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல் வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க படைகள் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் தலி பான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். தலிபான்களுக்கு அஞ்சி, அந்நாட்டைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். தலிபான்களுக்கு எதிராக போராடி வந்த பஞ்ச்ஷிர் கிளர்ச்சி படையினரையும் அடக்கி, அந்த மாகாணத்தையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இருந்தும் அங்கு சண்டை நடந்து வருவதாகக் கூறப்படு கிறது.
இதற்கிடையே, பெண்களுக்கான கல்வி உள்ளிட்ட விஷயங்களில் தலிபான்கள் கடுமை யான கட்டுப்பாடுகளை அங்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு இசை நிகழ்ச்சிகளுக்கும் இசைக்கும் தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது. 20 வருடங்களுக்கு முன் அங்கு தலிபான் ஆட்சி நடந்தபோது இசைக்கு தடைவிதிக்கப்பட்டது. அதனால் இப்போதும் தடை விதிப்பார் கள் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆப்கான் நாட்டுப்புற கலைஞரை அவர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் கடந்த மாதம் நடந்தது. இதனால் உயிருக்கு பயந்து பல இசைக் கலைஞர்கள், பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்று வருகின்றனர்.
இதுபற்றி ஆப்கானிஸ்தான் பாடகர் பசுன் முனவர் கூறும்போது, நாங்கள் எங்கள் தொழிலை விட்டாலும் தலிபான்கள் எங்களை சும்மா விடமாட்டார்கள். அவர்கள் காபூலை கைப்பற்றி யதும் அனைத்து இசை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன’ என்கிறார்.
மற்றொரு பாடகரான அஜ்மல் கூறும்போது, தலிபான்கள் காபூலை கைப்பற்றியதுமே, நான் என் உடைகளை மாற்றிக்கொண்டு பாகிஸ்தானின் பெஷாவருக்கு வந்துவிட்டேன். நாங்கள் தலிபான்களுக்கு எதிரிகளல்ல. அவர்களை எங்கள் சகோதரர்களாகவே பார்க்கிறோம். ஆனால் அவர்கள் எங்களின் இசையை விரும்பவில்லை என்பதால் எங்களால் அங்கு பாதுகாப்பாக வாழ முடியாது என்கிறார்.
பாகிஸ்தானை சேர்ந்த இசைக் கலைஞர் குலாப் அப்ரிதி கூறும்போது, ஆப்கான் மக்கள் இசையை மிகவும் விரும்புகிறார்கள். அங்கு தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாகிஸ்தான் வரும் அவர்களையும் அவர்கள் இசையையும் வரவேற்கிறோம் என்கிறார்.









