முக்கியச் செய்திகள் தமிழகம்

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Advertisement:
SHARE

Related posts

கேரளாவில் தற்கொலை செய்த திருநங்கையின் காதலரும் உயிரிழப்பு

Gayathri Venkatesan

“சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்ற முயற்சி” -தொல்.திருமாவளவன்

Halley karthi

12-ம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம்!