நாமக்கல்லில் ஒன்று சேர்ந்து வாழ வற்புறுத்தியதால், 40 வயது பெண்ணை இளைஞர் கொலை செய்தார்.
நாமக்கல் கொசவம்பட்டி அருகே கடந்த 23 ஆம் தேதியன்று சாலை ஓர கிணற்றில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் பெண் சடலம் மிதப்பத்தாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதணைக்கு அனுப்பினர். அப்போது அந்த பெண் அணிந்திருந்த உடைமைகளை வைத்து அடையாளம் காணும் பணியில் ஈடுப்பட்டதோடு, காணாமல் போன பெண்களின் விவரத்தையும் சேகரித்து வந்தனர்.
அப்போது கடந்த ஒரு மாதத்திற்கு முன் நாமக்கல் கொசவம்பட்டி, தேவேந்திர குல தெருவை சேர்ந்த லலிதா (40) என்ற பெண் காணாமல் போனது தெரியவந்தது. பெண்ணின் உறவினர்களை அழைத்து வந்து அழுகிய நிலையில் இருந்த சடலத்தை பார்க்க வைத்த போது, அது லலிதா என்பது உறுதியானது. இதன் பின் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் லலிதாவின் கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதாகவும், வீட்டில் தனியாக இருந்த லலிதா பல ஆண்களிடம் தகாத உறவு வைத்திருந்ததாகவும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்ததில், அதே தெருவில் பெட்டிக் கடை வைத்திருக்கும், சுரேந்தர் (30) என்பவருடன் லலிதா நெருக்கமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து சுரேந்தரை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், லலிதாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், லலிதாவும், தானும் 8 மாதங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அப்போது அடிக்கடி லலிதா என்னை திருமணம் செய்து கொள்ள வற்புத்தி வந்தார். இதனால், எங்களுக்கிடையே அவ்வப்போது சண்டை நடந்தது. கடந்த நவம்பர் 15ஆம் தேதியன்று எங்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான், லலிதாவை அடித்து கொலை செய்து விட்டு சாக்கு மூட்டையில் கட்டி சடலத்தை கொசவம்பட்டி அருகே உள்ள சாலையோர கிணற்றில் வீசினேன். இதையடுத்து, அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேந்தரை கைது செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.







