நகைக்கடன் தள்ளுபடி குறித்து அரசு திடுக் அறிவிப்பு.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேர் தள்ளுபடி பெற தகுதி அற்றவர்கள் என்றும் கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி ஆகாது என தமிழ்நாடு அரசு தெரிவிக்கப்படுள்ளது.…

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேர் தள்ளுபடி பெற தகுதி அற்றவர்கள் என்றும் கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி ஆகாது என தமிழ்நாடு அரசு தெரிவிக்கப்படுள்ளது.

விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக அறிவித்தது. அதன் படி, தேர்தலில் வென்று திமுக ஆட்சியை கைப்பற்றியதும், பட்ஜெட் சட்டமன்ற தொடரின் போது நகைக்கடன் தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கப்பட்டது. அதில், 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் உள்ளவர்களுக்கு சில தகுதியின் கீழ் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, தற்போது பொது நகை கடன்களை ஆய்வு செய்து தகவல் பதிவேற்றும் பணி நடைபெற்று வருவதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, 48,84,726 நகைக் கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படாது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்கள், நகைக்கடன் தொகையை முழுமையாக செலுத்தியவர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அனைத்து அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படாது என கூட்டுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.