கடற்கரைப் பகுதிகளில் சாகச சுற்றுலாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வருடந்தோறும் பட்டம் விடும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழகத்தில் முதல் முறையாக சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் பட்டம் விடும் திருவிழா நடைபெறுகிறது. இன்று தொடங்கி ஆகஸ்ட் 15 ம் தேதி வரை நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை அமைச்சர்கள் மதிவேந்தன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சாதாரண பட்டங்களை போல் அல்லாமல் மாமல்லபுரத்தில் உள்ள சிலைகள் வடிவில் பலூன்கள் தயார் செய்யப்பட்டு பறக்க விடப்பட்டது.நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், “ஒவ்வொரு வருடமும் இதே போன்று சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அதிக சுற்றுலா பயணிகள் வந்து சேரும் இடம் என்பதால் அங்கு நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் சுற்றுலாத்துறை அதிகம் பாதிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
இப்போது புதிய நிகழ்ச்சிகளை நடத்தி வருவதால் இனிவரும் காலங்களில் சுற்றுலாத் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் எனவும், கடற்கரைப் பகுதிகளில் சாகச சுற்றுலா கொண்டு வர திட்டமிட்டுட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐகானிக் சிட்டி தொடர்பாக மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.