முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒலிம்பியாட் போட்டியால், நவீனமாகக் கட்டமைக்கப்பட்ட மாமல்லபுரம்!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியால் உலக அளவில் அடையாளம் பெற்றிருக்கும் மாமல்லபுரம், தற்போது அடிப்படை கட்டமைப்பிலிருந்து நவீன சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.

UNESCO-வால் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத சுற்றுலாத்தலமாக விளங்கி வரும் மாமல்லபுரம், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்குப் பிறகு சர்வதேச சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது. கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் இந்த மாதம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளினால், புத்துயிர் மற்றும் புது அடையாளம் பெற்றுள்ளது மாமல்லபுரம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாபெரும் துறைமுக நகரமாக விளங்கி வந்த பகுதியானது, தற்போது நிலைத்து நிற்பதும், வாழ்ந்து வருவதும், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மட்டுமே என்றால் அது மறுக்க முடியாது. அதே சமையம் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2021 இறுதி வரை கொரோனா தொற்றால், காலனியங்கள் முதல் கருப்பசாமி வரை ஒருவருடைய கால் தடம் கூடப் படாமல் இருந்த நிலையில், பல்லவர் காலத்துச் சிற்பங்கள் கூட மனம் நொந்து ஒன்றை ஒன்று முணுமுணுத்துக் கொள்ள ஆரம்பித்தன. வியாபாரிகள் மற்றும் மாமல்லபுரம் எனும் பிரம்மாண்ட சுற்றுலாத் தளத்தை நம்பி இருந்த ஆயிரக்கணக்கானோர் குடும்பங்களின் நிலை முற்றிலும் பொருளாதார நெருக்கடியால் பாதிப்பிற்கு உள்ளாகியது.

கடல் அலை சப்தமும், காணல் நீர் அனலுமாகக் காட்சியளித்த மாமல்லபுரம், மறுவாழ்வு பெறும் நோக்கில், தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டது. சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஒலிம்பியாட் போட்டியால் 186 நாடுகளைச் சேர்ந்த 2000 மேற்பட்ட போட்டியாளர்கள் வருவார்கள் என்பது மட்டும் அல்லாமல், மேலை நாட்டுச் சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள், முதலீட்டாளர்கள் எனப் பலரும் மாமல்லபுரம் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலா தளங்களை அடையாளம் காண்பார்கள் எனக் கணிக்கப்பட்டு, அவை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த பதிமூன்று நாட்களாக நடைபெற்று முடிந்த பிரம்மாண்ட திருவிழாவால், சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரிப்பால் மீண்டும் அடையாளப்படுத்தப் பட்டு இருக்கிறது மாமல்லபுரம்.

அண்மைச் செய்தி: ‘‘பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார்; தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்’ – பிரதமர் மோடிக்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதில்’

இந்நிலையில் அங்குள்ளவர்களிடம் நாம் கேட்கும்போது, எங்கள் ஊர் இத்தனை நாட்கள் சுத்தமாக இருந்தது, கழிப்பறை வசதிகள் சீர் செய்யப்பட்டது, அனைத்து கடைகளும் அங்கீகரிக்கப்பட்ட லைசன்ஸ் வாங்கி விட்டோம், சாலை முழுவதும் விளக்குகள், வெளி நாட்டவர்கள் பொருட்களை அதிகம் வங்கி செல்கிறார்கள். பிரதமர் மோடி வருகையால் ஒருமுறை உலகெங்கும் அடையாளப் படுத்தப்பட்ட மாமல்லபுரம், அதன் பின் சற்று செழிப்புடன் காணப்பட்டாலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப் பட்டது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கின்றனர்.

மேலும், வியாபார ரீதியில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். இனி வரும் காலங்களில் கூட்டம் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. ஒலிம்பியாட் போட்டியால் மீண்டும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தலைசிறந்த சுற்றுலாத் தலமாக இருந்து வந்த மாமல்லபுரம் இனி, வர்த்தக ரீதியில் முன்னேற்றங்கள் காணும். பல இடங்களில் அடிப்படை வசதி கூட இல்லாமல் இருந்த அனைத்தும் தற்போது முற்றிலுமாக வசதிகள் செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட ஒரு நகரமாக மாறி இருப்பது, வரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

– நாகராஜன்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரஞ்சிதமே பாடலில் விஜயின் நடனம்; டான்ஸ் மாஸ்டர் ஜானி வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

G SaravanaKumar

தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றிய கரூர் மாவட்ட ஆட்சியர்

Web Editor

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அரசு கல்லூரியில் தமிழ் கருத்தரங்கு!

G SaravanaKumar