தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதாகவும் பிற பகுதி கழிவு நீரை
இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக பெண் கவுன்சிலர் தலைமையில் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். தி மு கவினர் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியின் 8 வது வார்டு உறுப்பினர் ஆக
திமுகவின் மீனாட்சியின் நவநீதகிருஷ்ணன் உள்ளார். இந்த பகுதியில் தற்போது 17
லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் திட்டம் நடைபெற்று
வருகிறது.
தரமற்ற முறையில் கழிவு நீர் கால்வாய் மேடு பள்ளமாக அமைக்கப் படுவதாகவும் பொறியாளர், இதனை ஆய்வு செய்யாமல் அலட்சியமாக பணி செய்வதாக கூறுகின்றனர். இதற்கிடையில், ஏற்கனவே சாக்கடை செல்லும் கழிவு நீரை தங்கள் பகுதிக்கு
இணைப்பதகவும் கூறுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பெண் வார்டு உறுப்பினர் தலைமையில், பொதுமக்கள் நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
பொதுமக்களை சந்திக்க மறுத்த பேரூராட்சி நிர்வாகத்தினர், பணியை தொடர்ந்து நடத்த வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பெண் கவுன்சிலர் தலைமையில் பணி நடைபெறும் இடத்தில் குழியில் இறங்கி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது, அதிமுக பெண் கவுன்சிலருக்கு எதிராக திமுக வினர் அப்பகுதியில் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக கவுன்சிலர்கள் நான்கு பேர் மட்டுமே உள்ள நிலையில், திமுகவினர், தங்கள் பகுதிக்கு முன் வைக்க கூடிய நியாயமான கோரிக்கை களை கூட பேரூராட்சி நிர்வாகத்தினர் செயல் படுத்த வில்லை. சர்வாதிகாரத்துடன் நடத்த படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு அதிகாரிகளும் துணை செல்வதாகவும் புகார் கூறுகின்றனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், தரமற்ற முறையில் பணி மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக, பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக பெண் கவுன்சிலர், மாவட்ட ஆட்சியரிடம் உடனடியாக இந்த கழிவு நீர் கால்வாய் பணியை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை .







