முக்கியச் செய்திகள் கொரோனா

ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதி

ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த, அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், புதுச்சேரிக்கு வருபவர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி, செலுத்தியிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும்படி குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழு மூலம் எல்லை கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும், தொற்று அறிகுறியுடன் வருபவர்களை அடையாளம் காணவும், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட், திரையரங்குகள், திருமண நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணிக்க வருவாய், தொழிலாளர், சுகாதாரம், காவல் மற்றும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் தாலுகா மற்றும் பிர்கா அளவிலான கூட்டு ஆய்வு குழுக்கள் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தடுப்பூசிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், புதுச்சேரியில் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது அம்மாநில அரசு.

Advertisement:
SHARE

Related posts

குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்: குவியும் பாராட்டுக்கள்!

எல்.ரேணுகாதேவி

கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவது எப்போது?

Gayathri Venkatesan

தமிழர்களின் பண்பாடு குறித்து அறியப்படாத தகவல்கள் 6 மாதத்தில் வெளியாகும்: குமரேசன்

Vandhana