மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி என்பதை பதிவிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நலமுடன் உள்ளார்.
தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு இரண்டு தினங்களாக லேசான காய்ச்சல் இருந்த காரணத்தினால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
— கே.பாலகிருஷ்ணன் – K Balakrishnan (@kbcpim) January 8, 2022
கடந்த இரண்டு நாள்களாக லேசான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சங்கரய்யாவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரை கவனித்துக் கொள்ள தனி மருத்துவ குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தற்போது மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்புகொண்டு தெரிவித்தார். என்.சங்கரய்யா உடல் நலம் குறித்தும் கேட்டு அறிந்தார்.
— கே.பாலகிருஷ்ணன் – K Balakrishnan (@kbcpim) January 8, 2022
சங்கரய்யாவை கவனித்துக் கொள்ள தனி மருத்துவக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் உடல் நலன் குறித்த விவரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு கேட்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.







