முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழ்நாடு அரசு வழங்கி வரும் பொங்கல்பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு விலக்கப்படும் எனக்கூறிய திமுக தற்போது அதை மறந்து செயல்படுவதாக சாடினார். அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை ஒருபுறம் நடைபெற்றாலும், மறுபுறம் நீட் தேர்வு பயிற்சி மையங்களை செயல்படுத்தி வந்ததாகவும், ஆனால் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகவும், அரசு ஒருபுறம் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மறு புறம் மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி நிலையங்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா சிகிச்சை மையத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

Halley Karthik

95 % பேர் தடுப்பூசி போடாதவர்கள்: ஆளுநர் தமிழிசை!

பாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் மனைவி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு

Saravana Kumar