அதிமுக தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் – இபிஎஸ் அறிவிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் பணிக்குழுவை அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் அதிமுக…

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் பணிக்குழுவை அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் பணிக்குழுவை எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட 105 பேர் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் கூடுதலாக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி.ராஜேந்திரன், கழக அமைப்புச் செயலாளர்கள் சுதா கே.பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சரவணபெருமாள் ஆகியோரும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.